உதவியாளர் பணிக்கு தேர்வு என பரவும் தகவலை நம்பவேண்டாம்


உதவியாளர் பணிக்கு தேர்வு என பரவும் தகவலை நம்பவேண்டாம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் உதவியாளர் பணிக்கு தேர்வு என பரவும் தகவலை நம்பவேண்டாம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனங்கள் மத்திய அரசின் வேளாண், உழவர் நலத்துறையில் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மத்திய கூட்டுறவுத்துறையில் பதிவு செய்த கூட்டுறவு சங்கங்கள் காப்பீடு நிறுவனங்களாக செயல்பட மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்படுவதில்லை. தற்போது, பாரதீய கூட்டுறவு பொதுக்காப்பீடு நிறுவனம் சார்பில் பிரதம மந்திரியின் பயிர்க்காப்பீடு திட்டத்தில் செயல்பட 829 பயிர்க்காப்பீடு உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் பெயரிட்ட அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இப்பணியிடத்திற்கு விரும்புபவர்கள் ரூ.250 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என இணையதளத்தில் தவறான தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் இத்தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டிருப்பதால் இத்தகவலை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story