புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் - தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள்


புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் - தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள்
x

புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் என தாம்பரம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

போகி பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர், ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இதற்காக இடம் தேர்வு செய்து பழைய பொருட்களை வாங்க தாம்பரம் மாநகராட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், நமது சுற்றுச்சூழல் காற்றும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையும் இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எனவே மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிக்க வேண்டாம் எனவும், அதனை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் 8-ந்தேதி (இன்று) முதல் 14-ந்தேதி வரை வழங்கி புகையில்லா மற்றும் காற்று மாசில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுமாறும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story