"இந்திய நாட்டு பணத்தை அரசு அலுவலகத்திலே வாங்கல" - கொதித்தெழுந்த சின்னத்திரை நடிகர்


இந்திய நாட்டு பணத்தை அரசு அலுவலகத்திலே வாங்கல - கொதித்தெழுந்த சின்னத்திரை நடிகர்
x

ரூ.2 ஆயிரம் நோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வாங்க மறுப்பது தொடர்பான வீடியோவை கோதண்டம் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சென்னை திருநின்றவூரில் சின்னத்திரை நடிகர் கோதண்டம் மின்கட்டணம் செலுத்த மின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் மின்வாரிய அலுவலரிடம் ரூ2 ஆயிரம் நோட்டை கொடுத்துள்ளார்.

ஆனால், மின்வாரிய அலுவலர் அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் நோட்டை வாங்க மறுத்துள்ளார். அரசு அலுவலகங்களில் இந்திய ரூபாய் நோட்டை வாங்க மறுப்பது ஏன் என கோதண்டம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு மின்வாரிய அலுவலர், ரூ.2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் சென்று மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். ரூ.2 ஆயிரம் நோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வாங்க மறுப்பது தொடர்பான வீடியோவை கோதண்டம் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது ஆதங்கத்தை பதிவுசெய்துள்ளார்.


1 More update

Next Story