வாழைக்குஉரிய நஷ்ட ஈடு வழங்காவிடில் போராட்டம்


வாழைக்குஉரிய நஷ்ட ஈடு வழங்காவிடில் போராட்டம்
x

வாழைக்கு உரிய நஸ்டஈடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக தாலூகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்

திருப்பூர்

அவினாசி

வாழைக்கு உரிய நஸ்டஈடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக தாலூகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் அறிவித்தனர்

அவினாசிஒன்றியம் இராமியம்பாளையம், குமாரபாளையம், புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உடுமலைபேட்டை கிளையில் சேவூர் சுற்றுவட்டார விவசாயிகள் சூப்பர் நேத்திரன் என்ற ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிபிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையாமல் போனதாகவும் இதனால் வாழை விவசாயிகளுக்கு 3 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தாரில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர் இந்த புகாரின் அடிப்படையில் அவினாசி தாசில்தார் மோகன் தோட்டக்கலை துறை அலுவலர் அனுசியா உதவி அலுவலர்கள் சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர் இதை அடுத்து நேற்று தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் மோகனன் தலைமையில் இரு தரப்பினருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமாசங்கரி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினாமற்றும் அவினாசிசுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பாதிக்கப்பட்டவிவசாயிகள் கூறுகையில்13 மாதங்களில் அறுவடை செய்யும் ரகமாக சூப்பர் நேந்திரன் வாழைக்கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம்.ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் வாழைத்தாரில் சரிவர காய் பிடிக்காமல் முற்றிலும் பிஞ்சாகவே உள்ளது இதனால் 700-க்கு விற்க வேண்டிய வாழைத்தார் 20 ரூபாய்க்கு மட்டுமே விலை கேட்கின்றனர் இதனால் 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முன் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில்வாழை ஆராய்ச்சி மையத்தில் டெஸ்ட் எடுத்து அதற்குரிய காரணம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.



Next Story