கடற்கரைக்கு செல்ல வேண்டாம்... கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை


கடற்கரைக்கு செல்ல வேண்டாம்... கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
x

கோப்புப்படம்

மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்களும் கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும் வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் கடல் சீற்றம் இயல்பைவிட அதிகமாக இருப்பதாக தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு கடலோரப்பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது.

எனவே மீனவர்களும், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகள் எவரும் கடற்கரைப் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story