"மருத்துவம் படிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பெற்றோர்கள் மாணவர்களை மருத்துவம் படிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அன்புமணிக்கு ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ஸ்டாலின் தங்கமுலாம் பூசப்பட்ட வேல் வழங்கினார்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த உடன், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பலமுறை கூறியதாகவும், ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இன்றைய மாணவர்கள் மென்மையானவர்கள் என கூறிய அவர், பெற்றோர்கள் அவர்களை மருத்துவம் படிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கக்கூடாது என கேட்டுக் கொண்டார்.
Related Tags :
Next Story