சான்றிதழ்பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்


சான்றிதழ்பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்
x

நெமிலி தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

தாலுகா அலுவலகங்கள் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மற்றும் சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகளான ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று நெமிலி தாலுகா அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஆனந்தன் கூறியதாவது:- பொதுமக்கள் அனைவரும் அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி அறிந்துகொள்ளவேண்டும். சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெற இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் இருக்கவேண்டும். நலத்திட்டங்கள் பெற என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ளவே இந்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

1 More update

Next Story