வீடு, வீடாக விண்ணப்ப வினியோகம் தொடங்கியது


வீடு, வீடாக விண்ணப்ப வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 20 July 2023 8:15 PM GMT (Updated: 20 July 2023 8:15 PM GMT)

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வீடு, வீடாக விண்ணப்ப வினியோகம் ெதாடங்கியது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வீடு, வீடாக விண்ணப்ப வினியோகம் ெதாடங்கியது.

விண்ணப்ப வினியோகம்

தமிழகத்தில் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக விண்ணப்பம் வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கக்கூடிய முகாம் நடக்கும் இடம், நாள், நேரம் குறித்த விவரங்கள் பொறித்த டோக்கன் வழங்கப்படுகிறது.

செயலியில் பதிவேற்றம்

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:-

விண்ணப்பங்களை வினியோகம் செய்வதற்கு 270 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். தினமும் 60 விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெறுவதற்கு 221 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இவை செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு இடம், 1000 ரேஷன் கார்டுகளுக்கு 2 இடங்கள் என முகாம் நடத்தப்படும். முகாமிற்கு வரும்போது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் கட்டண ரசீது, ஆதாருடன் இணைக்கப்பட்டு உள்ள எண் உள்ள செல்போன் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story