வீடு வீடாக சென்று சாராயம் விற்பனை செய்த வியாபாரி கைது


வீடு வீடாக சென்று சாராயம் விற்பனை செய்த வியாபாரி கைது
x

கச்சிராயப்பாளையம்பகுதியில் டிப்டாப் உடை அணிந்து வீடு வீடாக சென்று சாராயம் விற்பனை செய்த வியாபாரி கைது துணைக்கு வந்த மைத்துனரும் சிக்கினார்

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கச்சிராயப்பாளையம் கிராமத்தில் வீடு வீடாக சென்ற சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்களை சோதனை செய்தபோது அவர்கள் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தொியவந்தது.

விசாரணையில் அவர்கள் கல்வராயன்மலை கொட்டப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் சரவணன்(வயது 22), இவரது மைத்துனர் கோயம்புத்தூர் ஆனைமலை கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பது தெரியவந்தது. இவர்களில் கொட்டப்புத்தூர் சரவணன் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக டிப்படாப் உடை அணிந்து பள்ளிபையில் சாராய பாக்கெட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் கச்சிராயப்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று சாராயம் விற்பனைக்கு புறப்பட்டபோது அவரது மைத்துனர் கோவை சரவணன் தானும் துணைக்கு வருவதாக கூறிவிட்டு இருவருமாக சேர்ந்து சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவை சரவணன் வேட்டி, சட்டை அணிந்தும், இன்னொருவர் பேண்ட், சட்டை அணிந்தும் இருந்ததால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது இருவரும் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளுடன் 12 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல்செய்தனர்.


Next Story