கலிங்கப்பட்டியில் இல்லம் தோறும் மருத்துவ திட்டம்


கலிங்கப்பட்டியில் இல்லம் தோறும் மருத்துவ திட்டம்
x

கலிங்கப்பட்டியில் இல்லம் தோறும் மருத்துவம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக அரசின் இல்லம் தோறும் மருத்துவம் எனும் சிறப்பு மருத்துவ திட்ட தொடக்க விழா கலிங்கப்பட்டி ரேஷன் கடை அருகில் உள்ள நூலகத்தில் நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் கமலநாதன், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவி மணிமொழி சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முகாமில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீரிழிவு, ரத்தஅழுத்தம், புற்றுநோய், உள்ளிட்ட நோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.Next Story