வீடு, வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி


வீடு, வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி
x

வீடு, வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை

சுதந்திரதினத்தையொட்டி வீடு, வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி அம்மாப்பேட்டை பகுதி ஊராட்சிகளில் நடந்தது.

களஞ்சேரி ஊராட்சி

அம்மாப்பேட்டை ஒன்றியம், களஞ்சேரி ஊராட்சியில் சுதந்திர தின பவள விழாவையொட்டி ஊராட்சிக்குட்பட்ட வீடுகளுக்கு சென்று தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து வீடு வீடாக சென்று தேசியக்கொடியை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர் வள்ளி விவேகானந்தன், ஊராட்சி துணை தலைவர் மல்லிகா, பணித்தள பொறுப்பாளர் ஜீவிதா, ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ஜெகத்குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வடக்குமாங்குடி ஊராட்சி

வடக்குமாங்குடி ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி தலைவர் கலைச்செல்விகனகராஜ் ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று தேசியக்கொடியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் அப்துல்நாசர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பத்மா, பணித்தளபொறுப்பாளர் அம்பேத் மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் கார்த்திக் செய்து இருந்தார்.

ஆத்திக்கோட்டை ஊராட்சி

75- வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்திக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் அமராவதி நித்தியானந்தம் ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடந்த 2 நாட்களாக ஆத்திக்கோட்டை ஊராட்சியில் உள்ள சுமார் 500 வீடுகளுக்கும் தேசிய கொடியை வினியோகம் செய்தனர். அத்திக்கோட்டை ஊராட்சி தலைவர் வீடு, ஊராட்சி அலுவலகம், மற்றும் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் இந்த குழுவினரே நேரடியாக சென்று 3 நாட்களுக்கு தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறி பெரும்பாலான வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்தனர்.


Next Story