வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி வருகிற 8-ந்தேதி வரை நடக்கிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி அரிசி ரேஷன் அட்டைதாரருக்கு ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ஆகியவை வழங்கப்பட உள்ளது.
டோக்கன் வழங்கும் பணி
இந்த பொங்கல் பரிசு தொகுப்பினை மக்கள் எளிதாக பெற்று செல்லும் வகையில் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
அதன்படி திருவாரூர் இலவங்கார்குடி கூட்டுறவு சங்கத்தின் மூலம் தொழவனக்குடி பகுதியில் ரேஷன்கடை விற்பனையாளர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இந்த டோக்கன் வழங்கும் பணி வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெறுகிறது.
வீடு, வீடாக சென்று வழங்குகின்றனர்
ஒரு நாளைக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கி உள்ளது. ரேஷன் கடை பணியாளர்கள், இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர்.