இரட்டை சதம் அடித்த தக்காளி விலை


இரட்டை சதம் அடித்த தக்காளி விலை
x

நெல்லையில் தக்காளி விலை உயர்ந்து இரட்டை சதம் அடித்தது.

திருநெல்வேலி

நெல்லையில் தக்காளி விலை உயர்ந்து இரட்டை சதம் அடித்தது.

வரத்து குறைவு

தினசரி உணவுகளில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் முக்கிய இடம் வகிக்கிறது. வடமாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தமிழகத்திற்கு தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி, இஞ்சி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.

நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட தக்காளி பின்னர் சற்று குறைந்து ரூ.120 முதல் ரூ.130-க்கு விற்கப்பட்டது. பின்னர் மீண்டும் விலை உயர்ந்து கிலோ ரூ.150 முதல் ரூ.165-க்கு விற்கப்பட்டது.

இரட்டை சதம்

இந்த நிலையில் வரத்து வெகுவாக குறைந்ததால் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் தக்காளி விலை இரட்டை சதம் அடித்தது. அதாவது 1 கிலோ தக்காளி ரூ.190 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகளில் ½ கிலோ, 1 கிலோவுக்கு குறைவாக சில்லறையாக தக்காளியை விற்கவில்லை. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதேபோன்று இஞ்சியின் விலையும் உயர்ந்து நேற்று கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பூண்டு, பருப்பு வகைகளும் விலை உயர்ந்தே காணப்பட்டது.



Next Story