அக்காளையும், கணவரையும் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காளையும், அவருடைய கணவரையும் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
கிரைண்டர் குழவியால் தாக்கி அக்காளையும், அவருடைய கணவரையும் கொன்ற தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பணம் கேட்டதால் தகராறு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சோலைமலை (வயது 52). இவர் ஆசிரியராக பணியாற்றினாா். இவருடைய மனைவி சரோஜா.
சரோஜாவின் உடன் பிறந்த தம்பி துரையரசன் (43). தொழிலாளி. இவர் திருவாரூரில் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சரோஜா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அவ்வாறு வரும் போது செலவுக்கு அக்காளிடம் பணம் வாங்கிச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் மீண்டும் அவர் சரோஜாவிடம் செலவுக்கு பணம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
குழவியால் தாக்கி கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், சரோஜாவை கிரைண்டர் குழவியால் தாக்கி கொலை செய்தார். அந்த நேரத்தில் சரோஜாவின் கணவர் சோலைமலை அங்கு வந்தார். அவரையும் கிரைண்டர் கல்லால் அடித்து துரையரசன் கொலை செய்தார்.
இந்த இரட்டைக்ெகாலை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையரசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இ்ந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து, துரையரசனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.