வங்கி பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமை:என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்கு


வங்கி பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமை:என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

தேனியில் வங்கி பெண் ஊழியருக்கு வரதட்சணை கொடுமை செய்த என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி தாமரை நகரை சேர்ந்தவர் மோகன்பிரகாஷ் (வயது 40). இவர் நெதர்லாந்து நாட்டில் மென்பொருள் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வினோதினி (31). இவர் ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "எனக்கும், மோகன்பிரகாசுக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 100 பவுன் நகைகள், கார், ரூ.6 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்தனர். இந்நிலையில், கணவரும், கணவர் குடும்பத்தினரும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் அவருடைய கணவர் மோகன்பிரகாஷ், மாமனார் ஜெயராம், மாமியார் முருகேஸ்வரி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story