டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள 'தினத்தந்தி' அலுவலகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், தவசி முத்து, ராஜபாண்டியன், ஆரோக்கியராஜ் ஆகியோர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

எம்.எல்.ஏ.-மேயர்

இதே போல டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்துக்கு பா.ஜ.க. சார்பில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான மகேஷ் தலைமையில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், ஜீவா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், கோட்ட தலைவர் தங்க மனோகரன் ஆகியோரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


Next Story