டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா
தென்காசியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் அர்ச்சனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார், மாவட்ட துணைச் செயலாளர் திருமலை குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சாம்பவர் வடகரை கிளை தலைவர் மோகன், பரமசிவன், இசக்கிமுத்து நாடார், முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story