நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது - டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பேச்சு
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு உரையாற்றினார்.
சென்னை:
கனடா நாட்டின் ஹாலிபாக்ஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக உயர்ந்து 15 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக 2-வது முறையாக ஒரு பெண், அதுவும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டு இருப்பதில் இந்தியா பெரும் மகிழ்ச்சி கொள்கிறது.
2014-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சேர்மன் என்கிற ஆண் விகுதி கொண்ட வார்த்தை, பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் சேர்பெர்சன் என மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பேணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.
2001 முதல் இந்தியாவில் பாலின வேறுபாடுகளைக் களையவும், பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பட்ஜெட்டில் பெண்கள் மேம்பாடுக்கு என தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஐ.நா.வின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மகளிருக்கான திட்டங்களைத் தீட்டி அமல்படுத்துகிறது.
நாடாளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் குறித்து கனடாவில் நடைபெற்ற பாலின சமத்துவத்திற்கான காமன்வெல்த் மாநாட்டில் எனது உரை.
— Dr Kanimozhi NVN Somu (@DrKanimozhiSomu) August 25, 2022
இந்திய மக்களவையில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 15.03% உள்ளது. (1/6) #65CPA #KANIMOZHINVNSOMU #RajyaSabhaMP pic.twitter.com/VIl5QhrA2c