தைலாபுரம் தோட்டத்தில் தமிழ் பெயர் பதாகைகள் திறப்பு டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது


தைலாபுரம் தோட்டத்தில் தமிழ் பெயர் பதாகைகள் திறப்பு டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தைலாபுரம் தோட்டத்தில் தமிழ் பெயர் பதாகைகள் திறப்பு விழா டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்தது.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அன்னை தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கலந்து கொண்டு பதாகைகளை திறந்துவைத்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி, மாநில பொருளாளர் திலகபாமா, மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் பெயர் பதாகைகளை அமைக்க கூறும் துண்டு பிரசுரங்களை அந்தந்த பகுதிகளில் வழங்குவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


Next Story