டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக யோகா தின விழா


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக யோகா தின விழா
x
தினத்தந்தி 22 Jun 2023 12:15 AM IST (Updated: 22 Jun 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் உலக யோகா தின விழா நடந்தது. உதவி பேராசிரியர் வசந்தி வினோலியா வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாசனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வாழ்த்தி பேசினார். யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சோபியா விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.


Next Story