டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 2:46 PM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். மாணவர் ஜேக்கப் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை விளக்கி பேசினார். முன்னதாக மாணவர் சிவா மற்றும் மாணவி அனுமோல் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். நிகழ்ச்சியை மாணவர் அஜெய் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாணவர் வினோத்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story