திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்


திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 2 May 2023 6:45 PM GMT (Updated: 2 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்புறப் பகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் 1999 விதி 6-ன் படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குமார், மாவட்ட ஊராட்சிக் குழு செயலாளர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story