வரையாடுகளின் வாழ்விட மேம்பாடு கருத்தரங்கு


வரையாடுகளின் வாழ்விட மேம்பாடு கருத்தரங்கு
x
தினத்தந்தி 6 Jun 2023 3:00 AM IST (Updated: 6 Jun 2023 3:01 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வாழும் வரையாடுகளின் வாழ்விட மேம்பாடு குறித்த கருத்தரங்கு அட்டகட்டியில் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வாழும் வரையாடுகளின் வாழ்விட மேம்பாடு குறித்த கருத்தரங்கு அட்டகட்டியில் நடைபெற்றது.

வாழ்விட மேம்பாடு

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் அக்காமலை புல்மேடு, வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையை ஒட்டிய வனப்பகுதி, அட்டகட்டி பகுதியில் வரையாடு மலை ஆகிய இடங்களில் அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் உள்ள நீலகிரி வரையாடுகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன. தற்போது தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் வரையாடுகளை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்து, வரையாடுகளையும், அதன் வாழ்விடங்களையும் பாதுகாப்பது, வரையாடுகள் குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் வால்பாறை அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன மேலாண்மை பயிற்சி மையத்தில் வரையாடுகள் வாழ்விட மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கை ஆனைமலை புலிகள் காப்பக வன பாதுகாவலரும், கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை கள இயக்குனர் பார்க்வேதேஜா முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கு

கருத்தரங்கில் கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் ஜக்கரியா, இயற்கை வனவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் சங்கர் ராமன், வனவிலங்குகள் பாதுகாப்பு மையத்தின் ஆலோசகர்கள் பவுல்பீட்டர் பிரேடிட், மோகன்ராஜ் மற்றும் விலங்கியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி ஆகியோர் வரையாடுகள் வாழ்விட பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினர்.

கருத்தரங்கில் பொள்ளாச்சி கோட்ட வனச்சரகர்கள் மணிகண்டன், புகழேந்தி, வெங்கடேஷ், திருச்செல்வம் மற்றும் வனவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி வனப்பாதுகாவலர் செல்வம் தலைமையில் பயிற்சி மையத்தின் வனவர், வனக்காவலர் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story