குளங்கள் தூர்வாரும் பணி


குளங்கள் தூர்வாரும் பணி
x

குளங்கள் தூர்வாரும் பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் செண்பகராமநல்லூர் ஊராட்சி மேலவன்னவநேரிகுளம், சிங்கனேரி ஊராட்சி தெற்கு இளையார்குளம், சிங்கநேரிகுளம், பாப்பான்குளம் ஊராட்சி பொத்தையடிகுளம் ஆகிய குளங்களை நாங்குநேரி யூனியன் மற்றும் டி.வி.எஸ். அறக்கட்டளை இணைந்து தூர்வாரும் பணி தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கி, குளங்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மங்களம் கோமதி, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி, யூனியன் துணைத்தலைவர் இசக்கிபாண்டி, பஞ்சாயத்து தலைவர்கள் முருகம்மாள் (செண்பகராமநல்லூர்), முத்துசொர்ணம் (சிங்கனேரி), எஸ்.ஆர்முருகன் (பாப்பான்குளம்), டி.வி.எஸ். கள அலுவலர் முருகன், கட்சி நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், பிரதீப், மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.Next Story