வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை


வாய்க்கால்களை தூர்வார கோரிக்கை
x

வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

மயிலாடுதுறை

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கோவிலான் வடிகால் வாய்க்கால், திருநகரி பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. கோவிலான் வடிகால் வாய்க்கால் மூலம் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2,280 ஏக்கர் விளைநிலங்களும், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட 2 ஆயிரம் குடியிருப்புகளும் பயன்பெற்று வருகின்றன. அதேபோல, அருகே உள்ள திருநகரி வாய்க்கால் மூலமும் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. மழை காலங்களில் உபரி நீர் வெளியேறவும் இந்த பாசன வாய்க்கால்கள் பயன்படுகின்றன.

புதர் மண்டிக் கிடக்கிறது

இந்த 2 பாசன வாய்க்கால்களும் தற்போது கோரைபுல் மற்றும் செடி கொடிகள் முளைத்து புதர் போல காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இந்த 2 வாய்க்கால்களும் தூர்வாரப்படாதது அப்பகுதி விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

தற்போது விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த 2 பாசன வாய்க்கால்களையும் தூர் வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story