வாய்க்கால் தூர்வாரும் பணி


வாய்க்கால் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

நாகை அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

நாகை அருகே பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்கால் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தூர்வாரும் பணியினை டிரோன் மூலம் பார்வையிட்டார்.பின்னர் அவர் கூறியதாவது:-

நாகை மாவட்ட கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

ரூ.4 கோடியே 97 லட்சம்

நாகை மாவட்டத்தில் ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 46 பணிகள் 378 கி.மீ தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் 6 கிலோமீட்டர் தேவநதி வாய்க்கால், 3 கிலோமீட்டர் தெத்தி வடிகால் போன்றவை ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story