கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி
திருக்கோவிலூரில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி பா.ஜ.க. மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் வக்கீல் ஜீவா வசந்தன், திருக்கோவிலூர் நகர தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி மற்றும் பொதுமக்கள் திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதாவிடம் மனுஅளித்தனர். இதையடுத்து நகராட்சி பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை நகராட்சி ஆணையர் கீதா ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story