வடிகால் வாய்க்கால் கட்டும் பணி


வடிகால் வாய்க்கால் கட்டும் பணி
x

கோண்டூர்-மடப்பட்டு இடையே சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு நடைபெறும் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியையும் அமைச்சர் சி.வெ.கணேசன் பார்வையிட்டார்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

கடலூர் கோண்டூர் - மடப்பட்டு இடையே சாலை விரிவாக்க பணி ரூ.230 கோடியில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் சரியான முறையில் வடிகால் வாய்க்கால் இணைப்பு ஏற்படுத்தாததால் மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலையில் தேங்கி உள்ளன.

இது பற்றி பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் வந்து வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை பார்வையிட்டார். பின்னர் அவர், மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வடிகால் வாய்க்கால் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


Next Story