வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி


வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
x

திருமருகல் அருகே வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்தது.

தஞ்சாவூர்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் ஆகியவை ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு தூர்வாரும் பணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செங்கல்வராயன், திருமருகல் உதவி பொறியாளர்கள் சரவணன், செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story