வாய்க்கால்களை தூர்வார வேண்டும்


வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை தொடங்குவதற்கு முன்பு குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கோயம்புத்தூர்
கோவை


பருவமழை தொடங்குவதற்கு முன்பு குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.


குறைதீர்க்கும் கூட்டம்


கோவை மாவட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக் கிழமை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.


இதற்கு கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கி விவசாயிக ளிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். பின்னர் விவசாயிகள் பேசிய விவரம் வருமாறு:-


நீர்நிலைகளில் கழிவுநீர்


தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி:-


மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஆறுகள், வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதால் மாசுபடுகிறது. எனவே நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். புதிதாக கல்குவாரி நடத்துவது, புதுப்பிப்பது போன்றவற்றுக்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்களிடம் மட்டுமே கருத்து கேட்க வேண்டும்.


நரசீபுரம் சிவக்குமார் :-


காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விட்டால் பொதுமக்க ளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மலையோர கிராமப்பகுதி மக்களை இணைத்து வனத்துறை சார்பில் வாட்ஸ்-அப் குரூப் உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க முடியவில்லை. அந்த முறையை மாற்ற வேண்டும்.


தூர்வார வேண்டும்


ஆனைமலையை சேர்ந்த ஜோதிமணி :-


ஆனைமலை பகுதியில் குட்டைகள் தூர்வாரப்பட்டு இருக்கிறது. ஆனால் தடுப்புச்சுவர்கள் பழுதாகி உள்ளதால் தண்ணீர் வந்தா லும் தேங்குவது இல்லை. எனவே தடுப்புச்சுவர்களை சரிசெய்ய வேண்டும்.


தீத்திபாளையம் ஆறுச்சாமி :-


தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி பகுதிகளில் குளம், குட்டைகள் தூர்வாரப்பட்டு உள்ளன. ஆனால் அந்த குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றார். இதே கருத்தை விவசாயிகள் பலரும் வலியுறுத்தி பேசினார்கள்.


இழப்பீடு தொகை


அன்னூர் ரங்கசாமி :-


விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தேன்பொறிகள் தரம் இல்லாமல் இருக்கிறது. அதுபோன்று மண்புழு உரம் தயாரிக்க வழங்கப்பட்ட உபகரணங்களும் தரம் இல்லை. ஒரு தென்னங்கன்று ரூ.300-க்கு வாங்குகிறோம். ஆனால் காட்டு யானை சேதப்படுத்தினால் ஒரு மரத்துக்கு ரூ.500 தான் வழங்கப்படுகிறது. எனவே இழப்பீடு வழங்கும் தொகையை உயர்த்த வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.


கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Next Story