வையம்பட்டியில் அர்ஜூனன் தபசு நாடகம்
தர்மபுரி
மொரப்பூர்:
இருமத்தூர் அருகே வையம்பட்டி கிராமத்தில் தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாபாரத விழா கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கியது. வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று அர்ஜூனன் தவசு நிகழ்ச்சி தெருக்கூத்து கலைஞர்களால் நாடகமாக நடித்து காட்டப்பட்டது. மேலும் மஞ்சள் நாட்டில் மாடு மடக்குதலும் நடந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இன்று (வியாழக்கிழமை) கண்ணன் தூதும், மன்னன் வாளும், நாளை (வெள்ளிக்கிழமை) அரவான் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (சனிக்கிழைமை) கண்ணன் கண்ட கருட வாகன காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இறுதி நாளான 7-ந் தேதி தீ மிதி விழாவும், துரியன் படுகளம், தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.
Next Story