திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வேப்பூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

கடலூர்

ராமநத்தம்

வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாளங்கள் முழங்க யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கழுதூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story