திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்


திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள விசுவநாதப்பேரி திரவுபதி அம்மன் கோவில் ஆடி மாத பூக்குழித் திருவிழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் திரவுபதி அம்மன், கிருஷ்ணர் அர்ச்சுனர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை புளியங்குடி சரக ஆய்வாளர் சரவணகுமார், செயல் அலுவலர் கேசவ ராஜன் மற்றும் காப்புக்கட்டி நிர்வாகிகள், அனைத்து மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story