திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா


திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா
x
தினத்தந்தி 17 Feb 2023 12:15 AM IST (Updated: 17 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலையில் திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா, வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திரவுபதியம்மன் கோவில்

ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு பக்தர்கள் மகாசிவாரத்திரி விரதம் இருப்பார்கள். 25-ந் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. அடுத்த மாதம்(மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம் மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிரசு ஆகியவை நடைபெறுகிறது.

குண்டம் இறங்குதல்

7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், மாலை அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துதல், 8-ந்தேதி நடைபெறுகிறது. பின்னர் திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.

9-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், மாலை ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை மஞ்சள் நீராடுதல், இரவு போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது. மேலும் குண்டம் திருவிழாவையொட்டி நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.


Next Story