செந்துறையில் திரவுபதி அம்மன் வீதியுலா


செந்துறையில் திரவுபதி அம்மன் வீதியுலா
x

செந்துறையில் திரவுபதி அம்மன் வீதியுலா வந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறையில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மகாபாரத நிகழ்ச்சிகளும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் விழாவின் சிகர நிகழ்ச்சியான பூவெடுத்தல் நாடகம் மற்றும் திரவுபதி, அர்ஜூனனை ஜோடியாக வைத்து பூவினால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாகனத்தில் ஏறி கேரள செண்டை மேளம் முழங்க திரவுபதி அம்மன், அர்ஜூனன் ஜோடியாக வீதியுலா வந்தனர்.


Next Story