காய்கறி பழங்களால் ஆன திரவுபதி முர்மு உருவம்


காய்கறி பழங்களால் ஆன திரவுபதி முர்மு உருவம்
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி ஜெயின் கோவில் விழாவில் காய்கறி பழங்களால் ஆன திரவுபதி முர்மு உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரப்பம் கிராமத்தில், பார்ஸ்வ பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோவில்) அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று குரு பவுர்ணமி பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மூலிகை குளியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையில் திரவுபதி முர்முவிற்கு 12 அடி உயரத்தில் கத்தரி, பூசணி, அவரைக்காய், தர்பூசணி உள்ளிட்ட காய்கறிகள், பழங்களை கொண்டு சிலை அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல், சுதந்திர போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர். இதை பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பார்ஸ்வ பத்மாவதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story