மயிலாடுதுறையில், திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் யாழ்திலீபன் தலைமை தாங்கினார். அமைப்பாளர் ஞான.வள்ளுவன், துணைச்செயலாளர் அரங்க.நாகரத்தினம், நகர தலைவர் சீனி.முத்து, செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் தளபதிராஜ் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் குணசேகரன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்தி மொழி திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக இந்தியை திணிக்க முயற்சிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நகர துணைச்செயலாளர் அறிவுடைநம்பி, ஒன்றிய தலைவர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.