சூரிய கிரகணத்தில் உணவு சாப்பிட்ட திராவிடர் கழகத்தினர்


சூரிய கிரகணத்தில் உணவு சாப்பிட்ட திராவிடர் கழகத்தினர்
x

சென்னை பெரியார் திடலில் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது.

சென்னை:

சூரியன், நிலவு, பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணங்கள் ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்வும் அழைக்கப்படுகிறது.

ஆண்டு தோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழ்கிறது. அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்தவகையில் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

இந்தியாவில் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. எதிர்பார்த்தப்படி சூரிய கிரகணம் நேற்று மாலை 5.14 மணியில் இருந்து மாலை 5.44 மணி வரை சுமார் அரை மணி நேரம் நடந்தது.

இந்த நிலையில் சென்னை பெரியார் திடலில் கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தினர் பங்கேற்று சூரிய கிரகணம் மிகுந்த நேரத்தில் உணவு சாப்பிட்டனர். இதில் ஒரிரு கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டனர்.


Next Story