திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Oct 2023 1:15 AM IST (Updated: 5 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் திராவிட தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவிலில் குடியிருப்புகளுக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், இந்த தாக்குதலுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.


Next Story