குமாரபாளையம் காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி


குமாரபாளையம் காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

குமாரபாளையம்:

குமாரபாளையம் காவல்துறை மனமகிழ் மன்றம் சார்பில் நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க வடிவேல் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் பாரதி, போலீஸ்காரர்கள் குணசேகரன், ராம்குமார், மகேந்திரன், பிரகாஷ், தீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story