மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு


மதுராந்தகம் ஏரி தூர்வாரும் பணி; கலெக்டர் ஆய்வு
x
செங்கல்பட்டு

மதுராந்தகம், ஆக.9-

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி ரூ.120.24 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களை கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, இணை இயக்குனர் (வேளாண்மை) அசோக், ஊரக வளர்ச்சித் துறை, மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ., மதுராந்தகம் தாசில்தார், வேளாண் பொறியியல் துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை வணிக துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story