வடக்குமாங்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி


வடக்குமாங்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி
x

வடக்குமாங்குடி வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி

தஞ்சாவூர்

பாபநாசம் தாலுகா வடக்குமாங்குடி பகுதியின் முக்கிய வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. வடக்குமாங்குடி வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் இருந்தது.

மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்து வந்தது. மழைகாலம் தொடங்கும் முன்னரே வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என கிராம மக்கள் சார்பில் ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் பொதுப்பணித்துறையினரை வலியுறுத்தினார். இதனை ஏற்று காவிரி வடிநிலை உதவி கோட்ட உதவி செயற்பொறியாளர் சிவக்குமார் பரிந்துரையின்பேரில் நேற்று வடக்குமாங்குடி வடிகால் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடந்தது. இப்பணியை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் தொடங்கி வைத்தார். வடிகால் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story