தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


தென்காசி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு ரெயில் மூலம் இன்று காலை வருகை தந்தார்.

தென்காசி,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு ரெயில் மூலம் இன்று காலை வருகை தந்தார். தொடர்ந்து, ரெயில் நிலையத்தில் இருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, அவருக்கு தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிபீட்டிலான 23 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பயனாளிகளுக்கு ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

இந்த நிலையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன்.1,03,508 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.ஆராதனா போன்ற குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசு என்ற பெருமையோடு பணியைத் தொடர்கிறேன். என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story