கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு


கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு
x

சேலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்தவரை போலீஸ் தேடுகிறது.

சேலம்

சேலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்து சாக்லெட் கொடுத்து பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்தவரை போலீஸ் தேடுகிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா

சேலம் அஸ்தம்பட்டி டி.வி.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் பொன் ராணி (வயது 69). இவர், நேற்று இரவு 8 மணி அளவில் தனது வீட்டில் இருந்தார். அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர், தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லெட் கொடுத்தபடி வந்தார். இதைக்கண்ட பொன்ராணியும் வீட்டு வாசலில் நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்தபடி இருந்தார்.

அந்த நபர் பொன்ராணிக்கு சாக்லெட் கொடுத்தார். பொன்ராணியும் சாக்லெட்டை வாங்கினார். கண் இமைக்கும் நேரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த நபர், பொன்ராணி கழுத்தில் அணிந்து இருந்த 6½ பவுன் தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம் பிடித்தார். இதை சற்றும் எதிர்பாராத பொன்ராணி அதிர்ச்சி அடைந்தார்.

தப்பி ஓட்டம்

உடனே திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். பொன்ராணி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மாயமாகி விட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story