தூத்துக்குடி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்


தூத்துக்குடி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே குழாய் உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் எம்.சவேரியார் புரம் அருகே உள்ள கீதாநகர் விலக்கு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் ஒரு இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் உடைப்பை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story