குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்


குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீா்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:45 AM IST (Updated: 1 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாகிறது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகிறது. இதனால் சாலையும் பெயர்ந்து சேதமடைகின்றது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுவதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோட்டையூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story