சாக்கடை கலந்த குடிநீர்; பெண்கள் திடீர் போராட்டம்


சாக்கடை கலந்த குடிநீர்; பெண்கள் திடீர் போராட்டம்
x

நெல்லை வண்ணார்பேட்டையில் சாக்கடை கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி பெண்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையில் வெற்றி வேலடி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் நேற்று குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து தண்ணீர் வந்தது. மேலும் புழுக்களும் அதில் வந்ததாக தெரிகிறது.

இதை கண்ட அந்தப்பகுதி பெண்கள் நேற்று மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் குழாய் முன்பு நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்து சாக்கடை நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டனர்.


Next Story