சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்.. அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்.. அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், கூடலூர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் போது, குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள தனியார் நிறுவனத்திற்காக மின்மாற்றிகள் மற்றும் மின் கம்பங்கள் நடும் பணி நடைபெற்றது. அப்போது, குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


Next Story