பழையகாயலில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா


பழையகாயலில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை   நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா
x

பழையகாயலில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பழையகாயலில் ரூ.15 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் ஆணையாளர் சுரேஷ், பஞ்சாயத்து துணைத்தலைவர் சுவீட்லின் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில் ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு வட்டார தலைவர் தாசன், மாவட்ட இளைஞரணி தலைவர் இசை சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story