தாம்பரத்தில் 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்


தாம்பரத்தில் 3 இடங்களில்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
x

தாம்பரத்தில் 3 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை டி.ஆர்.பாலு எம்.பி. திறந்துவைத்தார்.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட 3 இடங்களில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.21 லட்சத்தில் 3 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.

மேலும் புதியதாக கட்டப்பட்ட 3-வது மண்டல அலுவலக கூடுதல் கட்டிடத்தையும் திறந்துவைத்த டி.ஆர்.பாலு, கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப படிவங்கள் பெரும் மையத்தையும் பார்வையிட்டு, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனாவிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் ஜெயபிரதீப், சந்திரன், டி.காமராஜ், எஸ்.இந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

1 More update

Next Story